நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது நாட்டின் பொருளாதாரம் அழிந்து வெறும் எச்சங்கள் மாத்திரமே இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கம் வகை தொகையின்றி கடன் பெற்றிருந்ததால், நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றிருந்தது.
பொருளாதாரத்தின் எச்சங்கள் மாத்திரமே எஞ்சியிருந்தன. நிதியமைச்சர் கடன் உதவியை பெற்றுக்கொள்ள நடத்திய பல பேச்சுவார்த்தைகளின் போது வெட்கத்திற்கு உள்ளானார்.
கடனை திருப்பி செலுத்துவதே 2026ஆம் ஆண்டு வரை இலங்கையின் பிரதான பொருளாதார பணியாக இருக்கும்.
பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சியிலேயே இலங்கையின் ஏற்றுமதி பொருளாதார முறை உச்ச நிலையில் இருந்தது.
பராக்கிரமபாகு மன்னனின் அந்த யுகத்தை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.