குழம்பிய குட்டைகளின் மீன் பிடித்துவிட்டு எமது தலைமைகளை நாங்கள் சிதைத்துவிடக்கூடாது என முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான கலாநிதி என்.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூரில் நடைபெற்ற விடியல் அமைப்பின் மகளிர் தின நிகழ்வு நேற்று மாலை சிறப்பான முறையில் நடைபெற்றது.
விடியல் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் யோகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய குமரகுருபரன்,
இன்று வடக்கில் மக்கள் தங்களது உரிமைகளைப்பெற்றுக்கொள்வதற்கு போராடும் நிலை உருவாகிவருகின்றது. அதிலும் பெண்கள் இந்த போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இதேவேளை, அரசியலுக்காக வீரவாவேசம் பேசும் தலைவர்களை எதிர்பார்க்கமால் தங்களது பிரச்சினைக்கு தாங்களே போராடும் நிலையில் மக்கள் உள்ளனர் என்றார்.