இலங்கை தமிழரசுக்கட்சி கல்குடா தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ.மாணிக்கவாசகம், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ்.சம்பந்தமூர்த்தி ஆகியோரின் நினைவு தின நிகழ்வு நேற்று நடைபெற்றது.
கல்குடா தேர்தல் தொகுதி இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 1960 ஆண்டு இரண்டு முறை போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட செங்கலடியைச் சேர்ந்த பொ.மாணிக்கவாசகம் அவர்களின் 41வது ஆண்டு நினைவு தினம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது மாவட்ட சபைத் தலைவராக பதவி வகித்த செங்கலடியைச் சேர்ந்த எஸ்.சம்பந்தமூர்த்தி அவர்களின் 28வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏறாவூர்ப்பற்று செங்கலடி கிளையில் இடம்பெற்றது
இதன் முதல் நிகழ்வாக இருவரினதும் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்ததுடன் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு யாழ்.மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கிழக்கு மாகான சபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்தது.