தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அறிவித்தல்!

72 0
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பத்தல நீர் வழங்கல் திட்டத்தில் புதிய குழாய்கள் பதிக்கப்படுவதால், இராஜகிரிய வீதியில் சில்வா மாவத்தையிலிருந்து வெலிக்கட வீதி (மொரகஸ்முல்ல சந்தி) வரையிலான 100 மீற்றர் வீதி ஜூன் 30 முதல் ஜூலை 5ஆம் திகதி பி.ப. 4 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

குறித்த நேரத்தில் போக்குவரத்துக்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும், இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.