தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்பில் பெரும் உயிர், உடைமை இழப்பை ஏற்படுத்திய 1983 கறுப்பு ஜூலை 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டும், பல்லாயிரக்கணக்கான பெறுமதியுள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டு தென்னிலங்கையிலிருந்து அகதிகளாகத் துரத்தியடிக்கப்பட்டார்கள்.
65 ஆண்டுகளுக்கும் மேலாக தொடச்சியாக சிங்கள இனவாத அரசுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்பின் உச்ச கட்டமாக 70,000 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டமையும் 146,000 இற்கு மேற்பட்ட மக்கள் காணமல் போயும் பாரிய இன அழிப்பு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது.
தற்பொழுதும் சிங்கள குடியேற்றத்திற்கான நிலஅபகரிப்பு தாயக பிரதேசம் எங்கும் மிக வேகமாக இடம்பெற்று வருகிறது. தமிழ் இனத்திற்கெதிரான சத்தமில்லாத யுத்தம் தொடர்கின்றது.
எனவே முழுமையான அழிவில் இருந்து எம் மக்களை பாதுகாத்து கொள்ள அனைத்து பெல்ஜியம் வாழ் உறவுகளையும் இவ் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும், இந்த கலவரங்களின் போது நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கண்கண்ட சாட்சியாக இருப்பவர்கள் தங்கள் ஆறாத மனவடுக்களை வெளிப்படுத்த முன்வருவதன் மூலம் நடந்த கொடுமைகளை நாம் ஆவணப்படுத்துவதற்கு உதவுமாறு வேண்டி நிற்கிறோம்.
இதேதினத்தில் பெல்ஜியத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெரும் அளவிலான மக்கள் அணிதிரண்டு போராட்டத்தை வலுச்சேர்க்குமாறும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பெல்ஜியம் அழைப்பு விடுக்கின்றது.
படுகொலை செய்யப்பட்ட அனைத்து உறவுகளை நினைவு கூர்ந்து எம் தாயத்தின் விடிவுக்காய் உறுதி எடுக்க அனைவரையும் அணி திரண்டு வருமாறு அன்பாக வேண்டிகொள்கிறோம்.