இன்று ஜேர்மனியின் மிக நீளமான தொங்குபாலம் திறக்கப்படுகிறது.
மலையேற்றத்துக்குச் செல்வோர் இன்று முதல் ஸ்கைவாக் என்று அழைக்கப்படும் இந்த நடைபாதையைப் பயன்படுத்தி, சுற்றியுள்ள கிராமப்புறங்கள் அனைத்தையும் உயரத்திலிருந்து கண்டுகளிக்கலாம்.
100 மீற்றர் உயரத்தில், 600 மீற்றர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொங்குபாலம், 4.5 மில்லியன் யூரோக்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலுமுள்ள சாகச விரும்பிகளையும் சுறுல்லாப்பயணிகளையும் இந்த பிரம்மாண்ட தொங்குபாலம் கவரப்போகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!