கிண்ணியாவில் பரவி வரும் டெங்கு நோய் தாக்கத்தினால் கிண்ணியாவைச் சேர்ந்த மேலும் ஒருவர் இன்று காலை திருகோணமலை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா மாஞ்சோலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார்.
இவரின் சகோதரி ஒருவர் இவ்வார ஆரம்பத்தில் உயிரிழந்துள்ளதுடன் நேற்று இப்பிரதேசத்தில் ஒரு சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கிண்ணியாவில் பரவி வரும் டெங்குத் தாக்கத்தினால் இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக மரணம் ஏற்பட்டுவருகின்றது.
இன்றுவரை இப்பிரதேசத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது இப்பிரதேச மக்கள் மத்தியில் பாரிய கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.