ஜேர்மனின் சன் பாமின் குரூப் ஏ.ஜி. நிறுவனத்தின் தலைவர் பீடர் ஸ்க்ராம்ஸின் தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.
ஜேர்மன் – லங்கா காலநிலை தொழில்நுட்ப நிறுவனம் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி, நவீன தொழில்நுட்ப விவசாயத்துறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி அதன் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.
இலங்கை இளைஞர்களுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பத்தில் பயிற்சியளிக்கும் திட்டங்களுக்கு சுற்றாடல் நன்மைகள் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவை கருத்தில் கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு இலங்கை முன்னுரிமை வழங்கும் என பிரதமர் இதன்போது உறுதியளித்துள்ளார்.