பாராளுமன்ற நிதி குழுக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் முறுகல்

74 0

கோப் மற்றும் கோபா உட்பட அனைத்து பாராளுமன்ற குழுக்களுக்கும் செல்லுகையில், அரச அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விசேட வழிகாட்டலினை வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற குழுக்களின் தலைவர்கள் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற குழுக்களுக்கு வரும்  பெரும்பாலான அரச அதிகாரிகள் உரிய தயார் நிலையில் வருவது இல்லை என்று கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர்கள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட பிரதான நிர்வாக அதிகாரிகள் கணக்காய்வு குறித்தும் கணக்காய்வாளர் நாயகத்தின் வழிகாட்டல்களை அவதானத்தில் கொள்ளாது சந்திப்புகளுக்கு வருகின்றனர். இதனால் பாராளுமன்ற குழுக்களின் நேர-காலம் வீணடிக்கப்படுவதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களிடம், வினாவிய போது, பாராளுமன்றத்திற்கு அழைத்து தம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை கேட்பதும், பின்னர் அவற்றை ஊடகங்களுக்கு வெளியிடுவதுமாக உள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இருதரப்பினருக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தாத வகையில் பொது வழிகாட்டல் ஒன்றை முன்வைக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலாளர் இதன் போது மேலும் குறிப்பிட்டார்.