உடலில் 5.6 கிலோ தங்கத்தை மறைத்து வைத்து இந்தியாவிற்கு கடத்திச் செல்ல முயன்ற 05 பேரை சுங்க அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனா்.
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் சென்னை நோக்கிச் செல்லவிருந்த விமானத்தில் பயணிக்கவிருந்த போது, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளனா்.
சந்தேகநபர்கள் கொழும்பு பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.