அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ´அஸ்வெசும´ சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு இதுவரை 188,794 மேன்முறையீடுகளும் 3,304 ஆட்சேபனைகளும் கிடைத்துள்ளன.
குறித்த வேலைத்திட்டம் தொடர்பான முறைப்பாடுகள் அல்லது தகவல்களை அறிந்து கொள்வதற்காக 1924 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.