மகாவம்சம் என்பது இலங்கை வரலாற்று தகவல்களை உள்ளடக்கி, அதேவேளை பௌத்த மதத்தை முதன்மைப் படுத்தி பௌத்த பிக்குகளினால் பாளி மொழியில் ஏட்டுச்சுவடிகளில் செய்யுள் வடிவில் காலவரிசையாக குறித்து வைக்கப்பட்டவற்றை மூலமாகக்கொண்டு, தொகுக்கப்பட்ட இலங்கையின் பழமையான தொகுப்பு நூலாகும்.
இந்த நூல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டளவில், பாளி மொழியில், மகாநாம தேரர் எனும் பௌத்த பிக்குவினால் தொகுக்கப்பட்டது.
அதன்படி, யுனெஸ்கோவினால் 2023 இல் புதிதாக அறிவிக்கப்பட்ட 64 உலக சர்வதேச ஆவண மரபுச் சின்னங்களில் மகாவம்சம் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.