கொழும்பின் அண்மித்த பிரதேசங்களின் 3 பகுதிகளில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில் மின் கட்டணம் பட்டியலை வழங்கும் முறை ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்தப் பிரதேசத்தில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக இலத்திரனியல் மின் கட்டணப் பட்டியலை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது .
தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசங்களில் வசிக்கும் மின்சார பாவனையாளர்களுக்கே இந்த முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த டிஜிட்டல் வடிவில் மின் கட்டணம் பட்டியலை பெற்றுக் கொள்ள பின்வருமாறு SMS மூலம் பதிவு செய்யலாம்.
உங்கள் கணக்கு எண் …….. அதனைத் தொடர்ந்து REG<space> என டைப் செய்து 1987க்கு அனுப்பவும்.
இணையத்தில் பதிவு செய்ய, http://ebill.ceb.lk என்ற தளத்துக்கு பிரவேசிக்கவும்.