மெட்டியகொட, நிந்தன பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மேலும் இருவருடன் இணைந்து போலி இரத்தினக் கற்களை வழங்கி அதற்குப் பதிலாக பெறுமதியான தங்க நகைகளைப் பெற்றுக் கொண்டதாக காலி மற்றும் களுத்துறையில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் இவர்களிடமிருந்து வைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.