‘அரகலய’ போராட்டத்தின் போது முக்கிய செயற்பாட்டாளரான செயற்பட்ட பியத் நிகேஷலா நேற்று திங்கட்கிழமை (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு இல்லத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த சம்பவத்தை நேரடியாக ஒளிபரப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை (27) கோட்டை நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.