வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இரத்தினபுரி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சுதத் திஸாநாயக்க உள்ளிட்ட 6 பேருக்கு இரத்தினபுரி மேல்நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 5 வருடக் கடூழிய சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியதுடன் இது தொடர்பான மேன்முறையீட்டு மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல கொலை செய்யப்பட்டபோது எழுந்த அசாதாரண நிலைமைகளில் இரத்தினபுரியில் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு 50,000 ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சட்ட மா அதிபரினால் இரத்தினபுரி மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கு 5 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு முர்து பெர்னாண்டோ, குரே ராஜா மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வில் பரிசீலிக்கப்பட்டது.
இதன்போதே குறித்த மனுவை நிராகரித்த நீதிமன்றம் மேல் நீதிமன்றின் தீர்ப்பை உறுதிப்படுத்தியது.