சில சமூக வலைத்தளங்களில் நாடாளுமன்றத்தை விற்பனை செய்து விடுங்கள் என குறிப்பிடப்பட்டிருப்பதை தான் பார்த்ததாகவும்,
என்றும் இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற தற்போது தரம் தாழ்த்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அங்குகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையம் ஒன்றை நேற்று திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
என்றும் இல்லாத அளவுக்கு நாடாளுமன்றம் தரம் தாழ்த்தப்பட்டுள்ளது. அனுபவம் இல்லாத புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
அதேபோல் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்வது நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உகந்ததாக இல்லை.
இதனால், மக்களுக்கு நாடாளுமன்றம் மீது வெறுப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நாடாளுமன்றம் தேவையில்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், முழு நாடாளுமன்றமும் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.