கஞ்சா ஏற்றுமதியில் எவ்வித பொருளாதார நன்மையும் இல்லை

68 0

கஞ்சாவை ஏற்றுமதி செய்து பெரும் பொருளாதார நன்மைகளைப் பெறலாம் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கஞ்சா பாவனையை சட்டப்பூர்வமாக்குவதற்கு தற்போது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கஞ்சா ஏற்றுமதி மூலம் பொருளாதார பிழைப்பு இருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.