தான் பயணித்த அதே பஸ்ஸினால் மோதுண்டு உயிரிழந்த யுவதி : ஹைலெவல் வீதியில் சம்பவம்!

76 0

ஹைலெவல் வீதியில் அவிசாவளை, உக்வத்தை மயானத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் தான் பயணித்த அதே பஸ்ஸினால் மோதப்பட்டு 23 வயதுடைய யுவதி ஒருவர் ஞாயிற்றுக்கிழழமை (25) மாலை உயிரிழந்துள்ளதாக அவிசாவளை  பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த யுவதி அவிசாவளையிலிருந்து குறித்த பஸ்ஸில் பயணித்து உக்வத்தை மயானத்துக்கு அருகில் இறங்கி நடந்தபோது அதே பஸ்ஸினால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய  திலக்க்ஷி தில்க்ஷிகா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

யுவதியின் சடலம் அவிசாவளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை  இன்று (26) நடைபெறவுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அவிசாவளை தலைமையக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.