சிரியாவில் ரஷ்யா நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என யுத்த கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இரு சிறார்கள் உட்பட 9 பொதுமக்களும் அடங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இட்லிப் பிராந்தியத்திலுள்ள ஜஸ்ர் அல் சுகுர் நகரிலுள்ள சந்தையொன்றில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இவ்வருடம் சிரியாவில் ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையானோர் கொல்லப்பட்ட ரஷ்ய தாக்குதல் இதுவாகும் என மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்தேல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரு சிறார்கள் உட்பட 4 பொதுமக்கள் கொலலப்பட்டனர். ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு ஆதரளித்து வரும் ரஷ்ய படையினர், மேற்படி ட்ரோன் தாக்குதலுக்கான பதிலடியாக நேற்றைய தாக்குதலை நடத்தியுள்ளனர் என மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.