கேரள-ஆந்திர-கர்நாடக முதல்வர்களை தமிழக முதல்வர் சந்திக்க வேண்டும்

443 0

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரள, ஆந்திரா, கர்நாடக அரசுகள் நதிநீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை.140 ஆண்டுகளாக இல்லாத வறட்சி தமிழகத்தில் நிலவி வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்த அளவே நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. விவசாய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியாலும், தற்கொலை செய்தும் 300 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் 17 விவசாயிகள் மரணம் அடைந்ததாக கூறி நிவாரணமாக 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.மரணமடைந்த விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் கிடையாது என்பது ஏற்புடையதல்ல. அனைத்து நிலங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி நிலமற்ற விவசாயிகள் 1 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். நதி நீர் பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் சட்ட ரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் அணுக வேண்டும். இதுதொடர்பாக கேரள, ஆந்திரா, கர்நாடகா முதல்வர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச வேண்டும். தேவையானால் கம்யூனிஸ்டு கட்சியும் தேவையான உதவிகளை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.