தயாசங்கர் சிங்கை இடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை அந்த மாநில பாரதீய ஜனதா தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று ரத்து செய்தார்.
உத்தரபிரதேச பாரதீய ஜனதா துணைத்தலைவராக இருந்த தயாசங்கர் சிங்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பற்றி அவதூறாக கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் லக்னோ சரோஜினி நகர் தொகுதியில் போட்டியிட்ட தயாசங்கர் சிங்கின் மனைவியும், பாரதீய ஜனதா மகளிர் அணி தலைவியுமான சுவாதி சிங் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, தயாசங்கர் சிங்கை இடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை அந்த மாநில பாரதீய ஜனதா தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று ரத்து செய்தார்.
இந்த தகவலை பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா லக்னோ நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.