தமஸ்கஸ்-இல் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

267 0

சிரியாவின் தலைநகரான தமஸ்கஸ் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. இத்தகவலை சிரிய மனித உரிமைகள் ஆணைய வட்டாரங்கள் தெரியவித்துள்ளன.

சிரியாவின் தலைநகரான தமஸ்கஸ் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது என சிரிய மனித உரிமைகள் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக வெளியான தகவல்களில் தமஸ்கஸ் தாக்குதலில் ஈராக்கை சேர்ந்த 47 பக்தர்கள், 12 சிரியாவை சேர்ந்த அரசு வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு வெடிகுண்டு பேருந்திலும், மற்றொரு வெடிகுண்டினை தற்கொலை படையை சேர்ந்தவர் வெடிக்க செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் பலர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிரிய நாட்டு செய்திகளின் படி இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், 120 பேர் காயமுற்றதாக முதற்கட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தமஸ்கஸ் தாக்குதலுக்கு சிரியா நாட்டு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.