பிரித்தானியாவுக்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவின் நியமனத்தை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஆதரித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ரோஹித்த போகொல்லாகமவின் நியமனம் குறித்து நன்கு சிந்திக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளர்.
வெளிவிவகார அமைச்சராக இருந்த அவரது பாத்திரத்தை கருத்தில் கொண்டு ரோஹித்த போகொல்லாகம அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
அத்துடன் லண்டன் போன்ற இடங்களில் ரோஹித்த போகொல்லாகமவின் பதவி உதவும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
“இது நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு” எனவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார்.