ஜனாதிபதி நாடு திரும்பும் போது, விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு உத்தரவு

72 0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆயுதக் குழுக்களின் தாக்குதல் சாத்தியம், ஸ்னைப்பர் தாக்குதல் அபாயம், பொது மக்களால் குழப்ப நிலைகளை ஏற்படுத்தும் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் சாத்தியம் உள்ளிட்ட ஆறு விடயங்கள் தொடர்பான அபாயம் உள்ளதாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, ஜனாதிபதி மற்றும் பிரமுகர்கள் விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எவ்வாறு பாதுகாப்பை வழங்குவது என்பது தொடர்பில் 8 அம்சங்களின் கீழ், நீண்ட விளக்கத்துடன் அறிவுறுத்தல்களை அவர் வெளியிட்டுள்ளார்.