பேராதனை பல்கலைக்கழகத்தில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஐந்து தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்கார் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த இரண்டு மாணவர்களுக்கான ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது என்றார்.பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய நிலை இதுவாகும் என சுட்டிக்காட்டிய அவர்., மாணவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வழக்கமான உணவுகளை வழங்க முடியாத நிலை இருப்பதாகவும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.“சில மாணவர்கள் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள். அவர்களின் பெற்றோரால் அவர்களுக்கு பணம் அனுப்ப முடியாது. அவர்கள் விரிவுரைகளில் கவனம் செலுத்த முடியவில்லை, விரிவுரையின் போது சிலர் மயக்கம் அடைகிறார்கள், ”மஹாபொல கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மாணவர்களின் நிலைமையை மேலும் பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இளைஞர்கள்தான் தேசத்தின் எதிர்காலம். இவ்விவகாரத்தில் தாமதமின்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.அதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பெரும்பான்மையான மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும், தவறான தகவல்கள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக சிலருக்கு தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவை சரி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை தாமதமின்றி வழங்குவதற்கு திறைசேரியிலிருந்தும் நிதி பெறப்பட்டு வருவதாக அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024
தமிழர் வரலாறு
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்!
October 21, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள்
September 26, 2024 -
தியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்!
September 25, 2024
கட்டுரைகள்
-
5000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு
October 3, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
பிரான்சில் கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த மதிப்பளித்து நிகழ்வு
November 22, 2024 -
பிரான்சின் ஏனைய வெளி மாநிலங்களிலும் இடம்பெறவுள்ள மாவீரர் நாள்- 2024
November 18, 2024 -
மேதகு தேசியத் தலைவரின் அகவை விழா – யேர்மனி
November 2, 2024 -
பிரான்சில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2024
October 20, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 நெதர்லாந்து.
October 17, 2024 -
மாவீரர் நாள் – 2024 -பிரான்சு.
October 14, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 – சுவிஸ்.
October 14, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 -பெல்சியம்
October 7, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 -பிரித்தானியா
October 5, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 யேர்மனி, Dortmund.
September 29, 2024