ஜேர்மனியில் புயல், ஆலங்கட்டி மழை… போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

200 0

ஜேர்மனியின் பல பகுதிகளில் புயல் வீசியதுடன், ஆலங்கட்டி மழையும் பொழிந்துள்ளது. வீடுகளின் கூரைகள் பறந்த சம்பவங்களும், சாலைகளில் மரங்கள் விழுந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

புயல், ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் பெருமழையைக் கொண்டுவந்துள்ள நிலையில், சூறாவளி, புயல் மற்றும் ஆலங்கட்டி மழையும் பொழியக்கூடும் என ஜேர்மன் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

Hessen மாகாணத்திலுள்ள Kassel நகர அதிகாரிகள், பேருந்து மற்றும் ரயில் சேவைகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன், எப்போது அவை சகஜ நிலையை அடையும் என்பது தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

 

 

இந்த வானிலைக்குக் காரணம், Lambert என்னும் காற்றழுத்தத தாழ்வு நிலை என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதுடன், அது ஸ்பெயினிலிருந்து பிரான்சுக்கு நகர்ந்ததுடன், இப்போது ஜேர்மனியை வந்தடைந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே, இந்த புயலும் மழையும் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.