மிகவும் பின் தங்கிய கிராமங்களில் ஒன்றான சாந்தபுரம் கிராமத்தில் தரம் 11 வரை வகுப்புக்கள் காணப்படுகின்றன. இங்கு நீண்ட காலமாக 9 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.
புதிதாக மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்ற போதும் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் புறக்கணிப்பட்டு வருகிறது.
தகவல் தொழிநுட்ப பாடத்திற்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக 20 புதிய கணிணிகள் கொண்டுள்ள கணிணி வகுப்பறை பயன்பாடின்றி காணப்படுகிறது. அத்தோடு கணிதம், வரலாறு, உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு ஆசியர்கள் நியமிக்கப்படவில்லை.
தற்போது கல்வியியல் கல்லூரியில் இருந்து ஆசிரிய நியமனம் பெற்று நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வருகை தந்த போதும் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கு ஒருவரும் நியமிக்கப்படவில்லை பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு வினவிய போது குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கி. கமலராஜனை தொடர்பு கொண்டு வினவிய போது தற்போது கல்வியற் கல்லூரியிலிருந்து 50 ஆசிரியர்கள் வலயத்திற்கு அனுப்பட்ட போதும் அதில் அரைவாசி பேர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.
எனவே ஏனையவர்களும் கடமைக்கு வருகின்ற போது குறித்த பாடசாலைக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.