ஐக்கியநாடுகள் சபையின் பெண்கள் பிரிவு நலிவுற்றபெண் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டத்தினை இலங்கையின் பல்வேறுமாவட்டங்களில் நடைமுறைப்படுத்துகின்றது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டபெண் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் செயல்திட்டத்தின் ஒருசெயற்பாடாக முல்லைதீவு மாவட்டத்திற்கான கலந்துரையாடல், மாவட்டபதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில், அண்மையில் (செவ்வாய்) முல்லைதீவு மாவட்டசெயலகத்தில் நடைப்பெற்றது.
பிரதானமாக கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, வெலிஓயா ஆகியபிரதேச செயலகபிரிவிலுள்ள பெண் முயற்சியாளர்கள் இத்திட்டத்திற்கு உள்வாங்கப்படவுள்ளனர்.
முயற்சியாளர்களுக்கான பயிற்சி வழங்கப்படுவதுடன் வியாபாரதத்தினை மேம்படுத்திக்கொள்வதற்கான பொருட்கள் மற்றும் இயந்திரங்களும் வழங்கப்பட உள்ளன.
பொருளாதாரரீதியாக பெண்களைவலுப்படுத்தி அதனுடாக குடும்பபொருளாதாரத்தை மேம்படுத்துவதேதிட்டத்தின் பிரதானநோக்கமாக காணப்படுகின்றது.
இத்திட்டத்தினுடாக உற்பத்திமேம்படுத்தல், நிதிமுகாமைத்துவம், சந்தைப்படுத்தல் உட்படமேலும் பலபயிற்சிகள் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் ஐக்கியநாடுகள் சபையின் பெண்கள் பிரிவின் திட்ட இணைப்பாளரும், திட்டஆலோசகருமான பாலமுரளி, திட்டஉத்தியோகஸ்தர் பிரதீபாகுலசேகர உட்படபலர் கலந்துக்கொண்டனர்.