லபுதுவ – போகஹவெல்ல வீதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொத்தல பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் இன்று (22) இடம்பெற்றுள்ளது.
ரிச்சர்ட் பத்திரன வித்தியாலயத்துக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, முச்சக்கரவண்டியை நிறுத்தாமல் செலுத்திச் சென்ற நபர் மற்றுமொரு முச்சக்கரவண்டியில் மோதிய நிலையில் தனது ஆட்டோவிலிருந்து இறங்கி தப்பிச் சென்றுள்ளார்.
விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டியின் சாரதி சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.