பொரளை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முற்றத்தில் இன்று வியாழக்கிழமை (22) காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த வீட்டின் முற்றத்தில் இரண்டு முறை T -56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வீடு பிரபல பாதணிகள் நிறுவனமொன்றின் நிர்வாக பணிப்பாளர் ஒருவருக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.