ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் முன்னேற்ற அறிக்கை கோரும் நீதிமன்றம் !

124 0

வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜகுமாரி என்ற வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுணாவல   உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் புதன்கிழமை (21)  விசாரணைக்கு வந்தது.

இதன்போது சாட்சயமளித்த ஒருவர், வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து   பொலிஸ் உத்தியோகத்தரால் இராஜகுமாரி  தாக்கப்பட்டதைக் கண்டதாகத் தெரிவித்தார்.