நான் இலங்கையில் பதின்ம வயதில் அரசியல் கைதியாகயிருந்தேன் தற்போது நான் கனடாவின் தலைசிறந்த நிதி நிர்வாகிகளில் ஒருவர் என சிஐ குளோபல் அசெட் மனேஞ்மென்ட் மற்றும் சிஐ பினான்சியலின் நிறைவேற்று துணை தலைவர் ரோய் ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.
அவருக்கு 17 வயதாகயிருந்தவேளை இலங்கை தமிழர் என்ற காரணத்திற்காக ரோய்ரட்ணவேல் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்- பல மாதங்களாக அவர் சித்திரவதை செய்யப்பட்டார் மிகவும் ஈவிரக்கமற்ற நிலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
அவரது தலைவிதியை தீர்மானித்த ஒரு சந்திப்பின் பின்னர் அவரது விடுதலை சாத்தியமானது 1988 இல் அவரே கனடாவிற்கு புறப்பட்டார்.
மெயில்ரூமில் தனக்கு ஒரு வேலையை தருமாறு கேட்டுப்பெற்றுக்கொண்டார் தற்போது அவர் அதே நிறுவனத்தின் விநியோகப்பிரிவின் தலைவராக உள்ளார்.
2020இல் ரோய் ரட்ணவேலை கனடாவின் தலைசிறந்த நிறைவேற்று அதிகாரிகளில் ஒருவராக ரிப்போர்ட் ஒன் பிசினஸ் தெரிவு செய்தது.
சமீபத்தில் அவர் பிரிசினர் 1056 நான் எப்படி யுத்தத்திலும் சமாதானத்திலும் தப்பினேன் என்ற நூலை வெளியிட்டார்.
அனைத்து தடைகளையும் தாண்டி தான் எப்படி வெற்றிபெற்றேன் என்பதை அவர் இங்கு பகிர்ந்துகொண்டுள்ளார்.
நான் கொழும்பில் இலங்கையின் தலைநகரில் 1969ம் ஆண்டு பிறந்தேன் – நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவன் -அப்பா அரசாங்க உத்தியோகத்தர்அம்மாவீட்டுப்பெண் எனக்கு ரவி என்ற மூத்த சகோதரரும் இருந்தார்.
எனது சிறுவயதில்தந்தை அனேகமான தமிழர்கள் வாழ்ந்த வடக்கிற்கு செல்ல தீர்மானித்தார்இஎங்கள் பாதுகாப்பிற்காக.
பருத்தித்துறை என்ற கரையோர நகரில் நான் ஆண்கள்மாத்திரம் கல்விக்கு கற்க்கும் பாடசாலையொன்றிற்கு சென்றேன்நான் அங்கு கிரிக்கெட்டும் கால்பந்தாட்டமும் விளையாடினேன்.
யுத்தம் வெடிக்கும்வரை குழப்பமற்ற இயல்பான சிறுபிள்ளை பருவமாக அது காணப்ட்டது.
1948 இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தை பெற்றதுசிறுபான்மை தமிழர்களிற்கும் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களிற்கும் இடையில் இனமோதல் காணப்பட்டது.
1983 இல் அரசாங்கம்திட்டமிட்டு முன்னெடுத்த கறுப்புஜூலை என அழைக்கப்படும் தமிழர்களிற்கு எதிரான கலகம் தென்னிலங்கையில் இடம்பெற்றது – 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னரே பதற்றம் அதிகரித்து உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்ததுநான்கு வருடங்களின் பின்னர் மோதல் மேலும் தீவிரமடைந்தது.
ஒப்பரேசன் லிபரேசன் என்ற இராணுவநடவடிக்கையின் மூலம் விடுதலைப்புலிகள் என்ற கிளர்ச்சிகுழுவிடம் தாங்கள்இழந்த நிலத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
1987ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினர் பருத்தித்துறைக்கு வந்து 14 முதல் 40 வயதுடையை அனைத்து ஆண்களையும் சுற்றிவளைத்தனர்எனது சகோதரர் அவ்வேளை டென்மார்க்கிற்கு சென்றுவிட்டார் ஆனால் நான் கைதுசெய்யப்பட்டேன்.
அவர்கள் எங்களிற்கு கைவிலங்கிட்டு சில கிலோமீற்றர்கள் நடக்கச்செய்து சரக்குகப்பலொன்றில் ஏற்றினார்கள்.
இலங்கையின் தென்பகுதியில் உள்ள மிகமோசமான வதைமுகாமான பூசாவிற்கு நாங்கள் கொண்டு செல்லப்பட்டோம்இஎன்னை சுமார் 2700 பேருடன் அங்கு தடுத்துவைத்திருந்தனர்.
அந்த முகாமில் நான் பலவகையான சித்திரவதைகளை எதிர்கொண்டேன் இரும்புவயர்களால் என்னை தாக்கிபைபகளால் அடித்தார்கள் இராணுவ விசாரணையாளர்கள்
பிளாஸ்டிக் பைப்களில் மண்ணை நிரப்பி தலைகீழாக தொங்கவிடப்பட்டுள்ள எங்களின் கால்பாதங்களின் மீது அடிப்பார்கள்.
அதுமிகவும் வேதனையானதாக காணப்படும்மின்சார சித்திரவதைகளையும் எதிர்கொண்டோம்சிலரின்காதுகளில் இருந்து இரத்தம் வந்தது கண்கண் வீங்கியிருந்தன பார்க்க முடியாத நிலையில் அவர்கள் காணப்பட்டனர்.
நாங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என ஏற்றுக்கொள்ளவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.சித்திரவதையை தாங்க முடியாமல் அதிலிருந்து விடுபடுவதற்காக அவர்கள்வாக்குமூலத்தில்கைச்சாத்திட்டனர் ஆனால் அவர்களை முகாமிலிருந்து வெளியே செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.
என்னை கைதுசெய்து இரண்டுமாதமாகியும் நான் எங்கிருக்கின்றேன் என்பது எனது குடும்பத்தவர்களிற்கு தெரியாத நிலை காணப்பட்டதுசிங்கள அதிகாரியாக காணப்பட்டாலும் எனது அப்பாவின் நெருங்கிய நண்பராக காணப்பட்ட ஒருவரின் மூலம் எனது குடும்பத்திற்கு தகவலை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
சில நாட்களின் பின்னர் என்னை சிறைச்சாலையின் வாயிலிற்கு அழைத்தனர் நான் எனக்கு மரணம்தான் என நினைத்தேன்ஆனால் அங்கு எனது தந்தையின் நண்பர் இராணுவசீருடையில் நிற்பதை பார்த்தேன்.
அவர் என்னை சிறையிலிருந்து விடுவித்து எனது குடும்பத்தினருடன் சேர்த்தார்.
எனது பாதுகாப்பிற்காக நான் இலங்கையிலிருந்து வெளியேறவேண்டும் என எனது தந்தை தீர்மானித்தார்எனது அம்மாவின் சகோதரர் கனடாவில் வசித்தார்எனது தந்தை இலங்கையில்உள்ள கனடா தூதரகத்திற்கு மன்றாட்டமாக ஒரு கடிதத்தை எழுதினார் அவர்கள் என்னை நேர்முகத்திற்காக அழைத்தனர் நான் நேர்முகதேர்வின் போது சேர்ட்டை அகற்றி காயங்களை காண்பித்தேன்.
18 வயதில் நான் 1988ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 19ம் திகதி கனடாவின் ரொரன்டோவில் காலடிவைத்தேன்.
அவ்வேளை இலங்கையில் இந்திய படையினர் அமைதிகாக்கும் படையினர் என்ற அடிப்படையில் காலடிஎடுத்துவைத்திருந்தனர்.அவர்களிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இடையில் மற்றுமொரு யுத்தம் மூண்டிருந்தது நான் கனடாவிற்கு வந்து இரண்டு நாட்களின் பின்னர் எனது தந்தை சுட்டுக்கொல்லப்பட்டார் எனது ஒருபகுதி அவருடன் இறந்தது.
ஆனால் அவர் பெருமைப்படக்கூடிய பாரம்பரியத்தை உருவாக்கி வாழவேண்டும் என்பது குறித்து நான் உறுதியாகயிருந்தேன்.
BY ROY RATNAVEL, AS TOLD TO SANAM ISLAM
TORONTOLIFE.
ரஜீபன்