ஊழல் மோசடி மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹை அதிபர் மாளிகையில் இருந்து வௌியேறியுள்ளார்.
அவரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது.
அந்த முடிவை அந்நாட்டு அரசியல் சாசன சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, பார்க் கியூன்-ஹை பதவி இழந்தார்.
தீர்ப்பு வெளியானதிலிருந்து இதுவரை பார்க் கியூன்-ஹை கருத்து எதையும் வெளியிடவில்லை.
அவர் தொடர்ந்தும் அதிபர் மாளிகையில் தங்கியிருந்த நிலையில், இன்று அதிபர் மாளிகையில் இருந்து வௌியேறியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பதவி நீக்கம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மீதான ஊழல் புகார் தொடர்பான கிரிமினல் விசாரணை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.