தனியார் டெக்ஸி நிறுவனங்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செயற்பட அனுமதிப்பது தொடர்பில் சஜித் கவலை தெரிவிப்பு

85 0
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PickMe மற்றும் Uber போன்ற பாரிய தனியார் வாடகைக் கார்களின் சேவைகள் உள்வாங்கப்பட்டுள்ளமையினால் சிறிய அளவிலான வாடகைக் கார் சேவைகளின் அவல நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரேமதாச, இந்த தீர்மானத்தினால் 2000 இற்கும் மேற்பட்ட சிறிய அளவிலான வாடகை வாகன சாரதிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள் காரணமாக சிறிய அளவிலான வாடகை கார் சாரதிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.விமான நிலையத்தில் தனியார் டெக்ஸி சேவைகளை இயக்க அனுமதிக்கும் அரசாங்கத்தின் சமீபத்திய முடிவு சிறிய அளவிலான டெக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதித்துள்ளது.“கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவ்வாறான பாரிய அளவிலான டெக்ஸி தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தவறான முடிவு மற்றும் சிறிய அளவிலான டெக்ஸி சாரதிகளுக்கு அநீதி இழைக்கும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.தனியார் டெக்ஸி நிறுவனங்களின் சேவைகளை உள்ளடக்கிய 2000க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான டெக்ஸி சாரதிகளின் வேலைகளை பாதுகாக்குமாறு பிரேமதாச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து சிறிய அளவிலான வாடகை வாகன சாரதிகளையும் பாதுகாக்கும் வகையிலான முறைமையை அறிமுகப்படுத்துமாறும் அவர் அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.