போதைப்பொருள் கடத்தல் மூலம் 15 கோடி ரூபா சம்பாதிப்பு

89 0

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் 15 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணத்தை சம்பாதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கம்பளை வித்தனாலவின் சமந்தகுமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி மற்றும் உறவினர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஆகஸ்ட் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்காக  அடுத்த நீதிமன்ற தினத்தன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அரச தரப்பு சாட்சிகள் 6 பேருக்கு அழைப்பாணை அனுப்பவும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.