நடாசாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் ! சர்வதேச அமைப்பு வேண்டுகோள்

90 0

நகைச்சுவை கலைஞர் நடாசா எதிரிசூரியவை உடனடியாக விடுதலைசெய்யவேண்டும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைகைவிடவேண்டும் என சர்வதேச அமைப்பொன்று வேண்டுகோள்விடுத்துள்ளது.

சிவிகஸ் என்;ற சர்வதேச சிவில் சமூக கூட்டமைப்பே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

அவரது கைதும் தடுத்துவைத்திருப்பும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது குறித்த இலங்கையின் மனித உரிமை கடப்பாடுகளிற்கு முரணானது எனவும் சிவிகஸ் தெரிவித்துள்ளது.

நடாசா எதிரிசூரிய 2023 மே 27 ம் திகதி கைதுசெய்யப்பட்டார்,மூன்று நாட்களிற்கு முன்னர்  யூடியுப்பில் வெளியிட்ட இரண்டு  நகைச்சுவைகளிற்காக பௌத்தத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்தவீடியோவின் எடிட் செய்யப்பட்ட பதிவு வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியது அவர் அன்றே அந்த வீடியோவை மீளப்பெற்று மன்னிப்பு கோரினார் எனவும் அந்த அமைப்புதெரிவித்துள்ளது.

அவர் மன்னிப்பு கோரியபோதிலும் அவருக்கு எதிரான இணையவழி துன்புறுத்தல்களும் அச்சுறுத்தல்களும் அதிகரித்தன அவரது வீடு அமைந்துள்ள இடம் சமூக ஊடகங்களில் வெளியானது அவருக்கு எதிரான இணையத்தில் பாலியல் வன்முறை உட்பட மிரட்டல்கள் பல வெளியாகின எனவும் சிவிகஸ் தெரிவித்துள்ளது.

28ம் திகதி அவருக்கு எதிராக ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது எனவும் சிவிகஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

நடாசா எதிரிசூரியவின் கைது நையாண்டி உள்ளிட்ட கருத்து சுதந்திரத்தின் மீதான சகிப்புதன்மையின்மை இலங்கையில் அதிகரித்துவருவதை காண்பிக்கின்றது அவர் தடுத்துவைத்திருப்பது கலை வெளிப்பாடு மீதான தெளிவான தாக்குதல் எனவும் சிவிகஸ் தெரிவித்துள்ளது.

நடாசா கைதுசெய்யப்பட்டுள்ளமை ஐசிசிபிஆர் உடன்படிக்கையை மீறுவதாகும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடவேண்டும் என சிவிகஸ் அமைப்பின் பரப்புரை தலைவர் டேவிட் கோட் தெரிவித்துள்ளார்.

நடாசா எதிரிசூரிய இலங்கையில் உள்ள ஒரு சில பெண் நகைச்சுவை கலைஞர்களில் ஒருவர் மேலும் அவர் பாலினம் பேரினவாதம் பெண்வெறுப்பு மதபாசங்குத்தனம்,கல்வி குடும்பவாழ்க்கை மன ஆரோக்கியம் போன்ற பிரச்சினைகளை தனது ஸ்டான்ட் அப் நகைச்சுவை மூலம் பேசும் ஒரு பெண்ணியவாதியாக தனக்கான இடத்தை உருவாக்கியவர் எனவும் சிவிக்கஸ் தெரிவித்துள்ளது.