உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டின் போது உள்நாட்டுக் கடனில் எவ்வித குறைப்பும் இருக்காது என்றும் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டின் பொருட்டு பண வைப்பீட்டாளர்களுக்கு மற்றும் ஊழியர் சேமலாபம்,ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு எந்தவித அநீதியும் இழைக்கப்படாது என்றும் அரசாங்கம் இன்று (20) உறுதியளித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு என்பது குறைப்பு மட்டும் அல்ல என்றும், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்பதில் கடன் நிறுத்தம் அல்லது வட்டியைக் குறைப்பது ஆகியவையும் அடங்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்டுள்ளபடி உள்நாட்டுக் கடனை மறுசீரமைத்தால் நாடு பிற்காலத்தில் பாரிய பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.