கடந்த 25ம் திகதி மருத்துவமனையில் குழந்தையொன்று உயிரிழந்தமை தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என தகவல்கள் வெளியாகின்றன.
குழந்தைக்கு வழங்கப்பட்ட மயக்கமருந்து தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெறுகின்றன . விசாரணைகள் இடம்பெறுவதை உறுதி செய்துள்ள அதிகாரியொருவர் மேலதிக விபரங்களை வெளியிட மறுத்துள்ளார்.
எனினும் குறிப்பிட்ட மருந்து கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையிலேயே வழங்கப்பட்டதாக மற்றுமொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
பேராதனை மருத்துவமனையில் மயக்கமருந்து காரணமாக கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.