வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி சுதந்திரத்துக்கான பெண்கள் அமைப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை (20) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் கொழும்பு, பத்தரமுல்லை பகுதியிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முன்னால் இடம் பெற்றது.