கணவனால் துண்டிக்கப்பட்ட மனைவியின் கால்

76 0
கணவனால் துண்டிக்கப்பட்ட மனைவியின் காலை மீளப்பொருத்த முடியாத நிலைமை ஏற்றப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

கால் துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண்  கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே காலை மீண்டும் பொருத்த முடியவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிரிந்திவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண் ஒருவரின் கால் குடும்ப தகராறு காரணமாக கணவனால் துண்டிக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

நோயாளியின் நிலை தொடர்பில் கம்பஹா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த இலேபெரும, நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால், துண்டிக்கப்பட்ட காலை பொருத்துவதற்கான மாற்று சிகிச்சைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் குறித்த பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் மேலதிக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.