குறித்த சிறுமியை கட்டுப்படுத்த முடியவில்லை என அவரது பெற்றோர் வெலிமடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளாா்.
விசாரணைகளின் பின்னர் குறித்த சிறுமி, சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இருந்த போதிலும், நன்னடத்தை அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட உத்தரவின் அடிப்படையில் சிறுமியின் தந்தை மீண்டும் ஒருமுறை அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தாா்.
இருந்த போதிலும், கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி சிறுமி வெலிமடை நகரில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சிறுமியை அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், பொலிஸாரின் சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியை மருத்துவரிடம் ஆஜர்படுத்தியபோது, சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.
இதையும் மீறி, ஜூன் மாதம் 18ம் திகதி, சிறுமி மீண்டும் நகாில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னா் இது குறித்து பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு வந்த தாயும், தந்தையும் பொலிஸ் நிலையத்தினுள் உள்ள பொது மலசலகூடத்தில் விஷத்தினை குடித்துள்ளனா்.
இதனையடுத்து அவா்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும் சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் தந்தை சிகிச்சை முடியும் முன்னரே வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், தாய் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் வைக்கப்பட்ட சிறுமியை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்ற போதும் உரிய முறையில் பராமரிக்க முடியாத நிலையில் உள்ளதாக தொிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பாலியல் துஷ்பிரயோகம் தொடா்பில் சந்தேகத்தில் 28 வயதான நபரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.
குறித்த நபர் எதிா்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.