மீளாய்வின் போது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்

124 0
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வின் போது தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என எதிர்பார்த்துள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இம்மாத இறுதிக்குள் மீளாய்வு கூட்டம் நடத்தப்படவுள்ளதுடன் இதன்போது எமது எதிர்பார்ப்புகள் சீர்குலைக்கப்படுமாயின் அது தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வின் போது எமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என எதிர்பார்த்துள்ளோம்.

இம்மாத இறுதிக்குள் மீளாய்வு கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதன்போது முறையற்ற வரிக்கொள்கை தொடர்பில் தாம் முன்வைத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என நம்புகிறோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் தாம் முகங்கொடுத்து உள்ள சிக்கல்களுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக ஏற்கனவே உறுதி வழங்கினார்கள் என்பதை நினைவூட்டுகிறோம்.

இந்த நினைவூட்டல் தொடர்பிலான அறிவித்தல் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மீளவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வின் போது தங்களுடைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவ்வாறு எமது எதிர்பார்ப்புகள் சீர்குலைக்கப்படுமாயின் அது தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.