கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலை மறித்ததாக பிரபல கலைஞர் தமிதா அபேரத்ன, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இளைஞர் செயற்பாட்டாளர் ரதிந்து சேனாரத்ன உள்ளிட்ட 9 அரகலய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கடந்த வருடம் மே 30 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் போராட்ட செயற்பாட்டாளர்களுக்கு எதிராக கொம்பனி வீதிப் பொலிஸார் இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.