தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் அபாயத்தை நோக்கி நகர்த்திக்கொண்டி ருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சுமத்தியுள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புகூறல் ஆகியன இரண்டும் சமாந்திரமாக நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே தமிழ் மக்கள் கடந்தகால அடக்குமுறைகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று தெரிவித்தார்.
மேலும், ஜெனீவாத் தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களைக்கொண்டு பலம் வாய்ந்த நாடுகள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பயன்படுத்திக்கொண்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இவ்விடயத்தில் உறுதியாக இருந்திருந்தால், தமிழ் மக்கள் கோரும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தியிருக்கலாம் எனத் தெரிவித்த அவர் அந்தச் சந்தர்ப்பங்களையும் தமிழர் தரப்பு தவறவிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.