பூகோளச் செயற்றிறன் சுட்டியில் சிறீலங்கா 108ஆவது இடத்தில் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழறல் செயற்றிறன் சுட்டி 180 நாடுகளை உள்ளடக்கி, அமெரிக்காவின் யால் பல்கலைக்கழகத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகின்றது.
2015ஆம் ஆண்டுக்கான பூகோளச் செயற்றிறன் சுட்டியில் சிறீலங்கா 108ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தெற்காசிய நாடுகளில் சிறீலங்காவே முன்னிலையிலுள்ளது.
இந்தப்பட்டியலில் பின்லாந்து, ஐஸ்லாந்து, சுவீடன், டென்மார்க், சுலோவேனியா, ஸ்பெய்ன், போர்த்துக்கல், எஸ்தோனியா, மால்டா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
இதில், பிரித்தானிய 12ஆவது இடத்திலும் அமெரிக்கா 26 இடத்திலும் தெரிவாகியுள்ளன.
அத்துடன், சீனா 109ஆவது இத்திலும் இந்தியா 141ஆவது இடத்திலும் தெரிவாகியுள்ளன.