மியாட் மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு நவீன சிகிச்சை முறை அறிமுகம்

93 0

இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவமனைகளுள் ஒன்றான மியாட் இன்டர்நேஷனல் நாட்டிலேயே முதல்முறையாக எலும்பு முறிவு சிகிச்சையில் டிபியா நெய்ல் மேம்பட்ட அமைப்பை (Tibia Nail Advanced system) அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து மியாட் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இருசக்கர வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் சென்னை போன்ற நகரங்களில் மியாட் மருத்துவமனையில் தினமும் சுமார் 15 பேர் விபத்தால் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களுக்கு நவீன சிகிச்சை அளிக்கும் நோக்கில் டிபியா நெய்ல் மேம்பட்ட அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்தின் ஏஓ-சிந்தஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இது ஆங்கிள்-ஸ்டேபிள் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதன்மூலம் கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் வேகமாக குணமடைய முடியும்.

நெய்லிங் என்பது ஓர் அறுவை சிகிச்சை முறையாகும். இது முறிந்த எலும்பின் மேல்பகுதியில் உலோகக் கம்பி அல்லது அணியை செருகுவதை உள்ளடக்கியதாகும். இதன்மூலம் நோயாளி இயல்பான செயல்பாடுகளுக்கு விரைவாக திரும்ப முடியும்.

பாரம்பரிய அறுவை சிகிச்சை முறைகளில் பெரிய காயம், அதிக நோய்த் தொற்று அபாயம், உடல் எடையைத் தாங்குவதில் தாமதமாதல், நீண்டகாலமாக மருத்துவமனையில் தங்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால், புதிய டிபியா நெய்ல் மேம்பட்ட முறையால் மேற்சொன்ன பாதிப்புகள் குறையும்.