ஸ்டெம்செல்களில்இருந்து முதலாவது செயற்கை மனித கரு போன்ற அமைப்புகளை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முட்டை மற்றும் விந்தணுக்களின் தேவையை தவிர்த்து இந்த செயற்கை மனித கரு போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தமனித கருபோன்ற கட்டமைப்புகள் மனித வளர்ச்சியி ன் ஆரம்பகட்டங்களில் உள்ளன, அவற்றில் துடிக்கும் இதயமோ அல்லது மூளையோ இல்லை.
எனினும் விஞ்ஞானிகள் மரபணுநோய்கள் கருச்;சிதைவுகளிற்கான காரணங்களை புரிந்துகொள்ள ஒருநாள் இது உதவும் என தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த ஆராய்ச்சி முக்கியமான ஒழுக்க மற்றும் சட்டக்கேள்விகளை எழுப்பியுள்ளது மேலும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இது தொடர்பான சட்டங்கள் இல்லை.
இந்தத் துறையில் கண்டுபிடிப்புகளின் வேகம் மற்றும் இந்த மாதிரிகளின் வளர்ந்து வரும் நுட்பம் ஆகியவை உயிரியல் நெறிமுறை வல்லுநர்களை கவலையடையச் செய்துள்ளனஇ ஏனெனில் அவை வாழ்க்கையின் விளிம்பிற்கு இன்னும் நெருக்கமாக உள்ளன.
ஐவிஎவ் மூலம் உருவாக்கப்படும் மனித கருக்கள் தொடர்பில் நிறுவப்பட்ட சட்ட கட்டமைப்பு உள்ளது எனினும் ஸ்டெம்செல்கள் மூலம் உருவாக்கப்படும் மனித கருபோன்ற கட்டமைப்புகள் விடயத்தில் அவ்வாறான சட்ட கட்டமைப்பு இல்லை,என பிரான்சிஸ் கிரி;க் நிறுவனத்தின் உதவி ஆராய்ச்சி இயக்குநர் ஜேம்ஸ் பிரிஸ்கோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெம் செல் மூலம் பெறப்பட்ட மனித கருக்கள் போன்ற கட்டமைப்புகளை உருவாக்கும் விடயத்தில் ஒரு கட்டமைப்பிற்கான தேவை உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.