சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 259 வீதத்தால் அதிகரித்துள்ளது. மேலும் சில சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 300 முதல் 400 வீதம் வரையில் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற அரசாங்க கணக்குகள் தொடர்பான குழுவில் (கோபா) சிறைச்சாலைகள் திணைக்களத்தில் உள்ள பல பிரச்சினைகள் வெளிப்படுத்தப்பட்டன.
சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 259 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை சில சிறைச்சாலைகளில் 300 முதல் 400 வீதம் வரை உயர்ந்துள்ளது.
இதன்படி சிறைச்சாலைகளில் 11,762 கைதிகளுக்கு மாத்திரமே போதுமான இடவசதிகள் காணப்படுகின்றன.ஆனால் தற்போது 26,791 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 17,502 பேர் விளக்கமறியலிலும், 10470 பேர் போதைப்பொருள் தொடர்பிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட 9,289 பேரும், 3,569 பேர் போதைப்பொருள் தொடர்பிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 1, 309 பேர் அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தை ஸ்தாபிப்பது தொடர்பிலான தற்போதுள்ள சட்டமூலத்திற்கு பதிலாக சர்வதேச தரத்திற்கு அமைவாக புதிய சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு (கோபா) குழு பரிந்துரைத்த போதிலும் அந்த பணிகளில் தாமதம் ஏற்படுவது குறித்து அக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.