புத்தளம் பாலாவியிலிருந்து கொழும்பு பேலியகொடை பகுதிக்கு கட்டட வேலைக்காக சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக ஒன்று வீதியை விட்டு விலகி டெலிகொம் தொலைப்பேசி தொடர்பு கம்பத்தையும் உடைத்துக் கொண்டு தனியார் ஒருவரின் காணிக்குள் சென்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து பாலாவி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் அதிஷ்டவசமாக உயிர்த் தப்பியுள்ளார்கள்.
குறித்த விபத்திற்கான காரணம் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டெலிகொம் தொலைபேசி தொடர்பு கம்பம் உடைந்தமையினால் தொலைப்பேசி தொடர்பு பாலாவி, கல்லடி, அட்டவில்லு ஆகிய பகுதிகளில் இன்றைய தினம் அதிகாலை முதல் துண்டிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.